/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துாத்துக்குடியில் கஞ்சா வாங்கி சவுக்கு சங்கர் உதவியாளருக்கு ‛சப்ளை' * போலீஸ் விசாரணையில் சிறைக்கைதி வாக்குமூலம்
/
துாத்துக்குடியில் கஞ்சா வாங்கி சவுக்கு சங்கர் உதவியாளருக்கு ‛சப்ளை' * போலீஸ் விசாரணையில் சிறைக்கைதி வாக்குமூலம்
துாத்துக்குடியில் கஞ்சா வாங்கி சவுக்கு சங்கர் உதவியாளருக்கு ‛சப்ளை' * போலீஸ் விசாரணையில் சிறைக்கைதி வாக்குமூலம்
துாத்துக்குடியில் கஞ்சா வாங்கி சவுக்கு சங்கர் உதவியாளருக்கு ‛சப்ளை' * போலீஸ் விசாரணையில் சிறைக்கைதி வாக்குமூலம்
ADDED : மே 29, 2024 08:19 PM

தேனி:‛துாத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவர்களிடம் கஞ்சா வாங்கி, யு டியூபர் சவுக்கு சங்கர் உதவியாளருக்கு சப்ளை செய்வது வழக்கம்' என, தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட பாலமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். இவர் பெண் போலீசார், போலீஸ் அதிகாரிகள் குறித்து யு - டியூப் சேனலில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் மே 4ல் கைது செய்தனர். தேனியில் தனியார் ஓட்டலில் தங்தியிருந்த போது காரில் 409 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகிய மூவர் மீது வழக்குப் பதிந்து, உதவியாளர், கார் டிரைவரை கைது செய்தனர்.
கைதான இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணையில் அவர் பரமக்குடி அருகே ஆரக்குடியை சேர்ந்த மகேந்திரனிடம் கஞ்சா பெற்றதை ஒப்புக் கொண்டனர்.
மகேந்திரனை கைது செய்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவரிடம் 2.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை சிறையில் இருந்த பாலமுருகனிடம் பெற்று, கஞ்சா விற்பனை செய்வதாக மகேந்திரன் தெரிவித்தார். பின் இவ்வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பாலமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பழனிசெட்டிபட்டி போலீசார் அனுமதி கோரி மனு அளித்தனர். பாலமுருகனை நேற்று முன்தினம் மாலை 4:30 மணியில் இருந்து நேற்று மாலை 4:30 மணி வரை 24 மணி நேரம் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி செங்கமலச்செல்வன் அனுமதி வழங்கினார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பழனிசெட்டிபட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட பாலமுருகனிடம் இன்ஸ்பெக்டர் உதயகுமார் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பாலமுருகன், ‛ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டு துாத்துக்குடி துறைமுகத்தில் பரவலாக கஞ்சா சப்ளையாகிறது. நான் அங்கு பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் கஞ்சா பெற்று, மகேந்திரனுக்கு வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியுள்ளார்', என, தெரிவித்துள்ளார்.