/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 5546 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு
/
உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 5546 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு
உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 5546 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு
உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 5546 ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவு
ADDED : ஜூன் 02, 2024 02:37 AM
தேனி:தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள 5546 ஆசிரியர்களை ஜூன் 10க்குள் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக மாற்றுபணியாக மாறுதல் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆரம்ப பள்ளிகளில் 1:30 என்ற விகிதத்தில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். ஆனால் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக உள்ளது. இதுபற்றி கல்வித்துறை விபரம் சேகரிக்கப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் உதவி பெறும் பள்ளிகளில் 5546 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்.
இவர்களை அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மாற்றுப்பணியாக ஜூன் 10க்குள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில் 'உதவி பெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் இல்லை.
எமிஸ் ஐ.டி., மூலம் மாணவர்கள் எண்ணிக்கை உறுதி செய்யப்படுவதால், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரம் வாரியாக அரசுப்பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் பணியிடங்களில் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கூடுதல் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் நிரப்பப்படுவர். இவர்களில் ஜூனியர் ஆசிரியர்கள் வரிசைப்படுத்தப்பட்டு மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது என்றனர்.