/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் கனமழையால் பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு; தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடு

ADDED : மே 25, 2024 05:48 AM
மாவட்டத்தில் கடந்த மே 6 முதல் கோடை மழையுடன், காற்றழுத்த தாழ்வுப்பகுதிகளால் ஏற்படும் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் கம்பத்தை சேர்ந்த குத்தகைதாரர் கூடலிங்கம் சாகுபடி செய்த 1.97 எக்டேர் வாழைப்பயிர் சாய்ந்து சேதமடைந்தது. கீழகூடலுார் விவசாயி வெங்கடேசன், ராமன், தர்மலிங்கம் ஆகியோரின் 2.23 எக்டேரில் பயிரிடப்பட்ட வாழை முற்றிலம் சாய்ந்து சேதமடைந்துள்ளன. உத்தமபாளையம் விவசாயி உலகநாதனின் ஒரு எக்டேர் வாழை, சின்னமனுார் அழகாபுரியில் சுமதி, இளங்கோவன், சீப்பாலக்கோட்டையை சேர்ந்த மகேஸ்வரி ஆகியோர் பயிரிட்ட 3.90 எக்டேர் வாழை கனமழைக்கு சாய்ந்து சேதமடைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 9.10 எக்டேர் வாழை சாகுபடி பயிர் கனமழையால் சேதமடைந்துள்ளது.
வருவாய், வேளாண், தோட்டக்கலை, பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகளால் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பெரியகுளம் பகுதியில் வாழை பயிர்கள் சேதமடைந்ததால் பல தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ஏலக்கடைகளுக்கு வரத்து இல்லை. இதனால் மார்கெட்டில் வாழைகாய், வாழைப்பழம் வரத்து குறைவாக இருந்தது. மேலும் மழைக்கு மாவட்டத்தில் 21 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும் ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் ஒன்றியப் பகுதிகளில் வேளாண் துறையினர் பயிர் சேதவிபரங்களை கணக்கிடும் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென் மேற்கு பருவமழை மே 31ல் துவங்க உள்ளதை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
முல்லைப் பெரியாற்றின் கரையோரங்கள், வைகை ஆறு, கொட்டக்குடி ஆறுகளின் கரையோரங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு தற்போது முதலே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.