/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்
/
செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்
ADDED : ஆக 03, 2024 05:12 AM
போடி: போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் நுட்பம் குறித்து செயல் விளக்க கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் மரியசிங்கம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
செயற்கை நுண்ணறிவு, தொழில் நுட்பம் மூலம் பொறியியலில் உள்ள விளக்கங்கள், தர பகுப்பாய்வு, தேடல், கண்டுபிடிப்பு, பத்திரிக்கைசெயல்பாடு, வண்ண படங்களில் வடிவமைப்பு, படைப்பாற்றல், ஊக்கப்படுத்தும் விளையாட்டுகள், கம்ப்யூட்டர் விஷன், டிஜிட்டல் முறையில் கதைகள் கூறி பதிவு செய்தல் போன்ற தலைப்புகளில் பாடம் கற்பிப்பதற்கான செயல் விளக்கம் பற்றி ஆசிரியை சந்திரகலா மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.