/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாசில்தார், ஆர்.டி.ஓ.க்கள் அறிக்கை தர உத்தரவு: போதைப்பொருள் விற்பனையை தடுக்க ேவண்டும்
/
தாசில்தார், ஆர்.டி.ஓ.க்கள் அறிக்கை தர உத்தரவு: போதைப்பொருள் விற்பனையை தடுக்க ேவண்டும்
தாசில்தார், ஆர்.டி.ஓ.க்கள் அறிக்கை தர உத்தரவு: போதைப்பொருள் விற்பனையை தடுக்க ேவண்டும்
தாசில்தார், ஆர்.டி.ஓ.க்கள் அறிக்கை தர உத்தரவு: போதைப்பொருள் விற்பனையை தடுக்க ேவண்டும்
ADDED : ஜூலை 04, 2024 01:54 AM
கலெக்டர் ஷஜீவனா தலைமையில் போதை பொருள் தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் எஸ்.பி., கல்லுாரிகளின் இணை இயக்குனர், சி.இ.ஓ., ஆர்.டி.ஓ., உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர், சுகாதார இணை இயக்குனர், தாசில்தார்கள், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நகராட்சி கமிஷனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவின் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும். இக்குழுவின் நோக்கம் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் வினியோகத்தை முற்றிலும் தடுப்பதாகும்.
இக்குழு சார்பில் அனைத்து பள்ளிகள், கல்லுாரிகளில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அனைத்து மருந்து கடைகளிலும் டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள் மட்டும் விற்பனை செய்ய அறிவுருத்தப்படும்.
அரசு மருத்துவக்கல்லுாரியில் போதைப் பழக்க வழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் செய்து அறிக்கை வழங்கவும், உணவுப்பாதுகாப்புத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகங்கள், போலீசார் இணைந்து அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளிலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை தீவிரப்படுத்த வேண்டும்.
பள்ளி, கல்லுாரி அருகே உள்ள கடைகளில் அல்லது தனிநபர்கள் யாரேனும் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனையை தீவிரப்படுத்தியும், அப்படி விற்பனை செய்தால் கல்வி நிறுவனங்கள் அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தாசில்தார்களுக்கு அறிக்கை வழங்க வேண்டும்.
தாசில்தார், ஆர்.டி.ஓ.,க்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை போதைப்பொருள் கண்காணிப்பு, தடுப்பு பணி தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.