/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு
/
55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு
55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு
55 ஆயிரம் லி., உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு
ADDED : மே 25, 2024 04:12 AM
தேனி : மாவட்டத்தில் 55 லிட்டர் உயிர் உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கநிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண்அதிகாரிகள் தெரிவித்தனர்.உத்தமபாளையம் கருக்கோடையில் உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது.
இங்கு அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அஸோபாஸ், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஸ், ஜிங்க் உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உயிர் உரங்கள் பயிர்கள் வளர்ச்சிக்கு நன்கு உதவுவதால் விவசாயிகளிடம் வரவேற்ப்புஉள்ளது.இந்த உற்பத்தி மையத்தில் நடப்பாண்டில் 55 ஆயிரம் லிட்டர் உயிர் உரங்கள் தயாரிக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுவரை 2200 லி., உரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.தயாரிக்கப்படும் உரத்தில் தேனிமாவட்டத்திற்கு 13,356லி., நாமக்கலுக்கு 37,610 லி., திருச்சிக்கு 4,034 லிட்டர் அனுப்ப உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.