/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டாஸ்மாக் லஞ்ச ஒழிப்பு சோதனையால் தாசில்தார்கள் ஓய்வு பெறுவதில் சிக்கல்
/
டாஸ்மாக் லஞ்ச ஒழிப்பு சோதனையால் தாசில்தார்கள் ஓய்வு பெறுவதில் சிக்கல்
டாஸ்மாக் லஞ்ச ஒழிப்பு சோதனையால் தாசில்தார்கள் ஓய்வு பெறுவதில் சிக்கல்
டாஸ்மாக் லஞ்ச ஒழிப்பு சோதனையால் தாசில்தார்கள் ஓய்வு பெறுவதில் சிக்கல்
ADDED : மே 01, 2024 08:03 AM
தேனி : தேனி மாவட்ட டாஸ்மாக்கில் பணிபுரிந்த சில அலுவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் அவர்கள் ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி டாஸ்மாக் கோடவுனில் 2023 நவ.,ல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரூ. 27ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான அறிக்கை சென்னை டாஸ்மாக் இயக்குனரகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழங்கினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையின் போது தாசில்தார்கள் முருகேசன், செந்தில்முருகன், துணை தாசில்தார் பிரபாகரன் ஆகியோர் அங்கு பணியில் இருந்தனர். இந் நிலையில் 2024 ஜன.,ல் தேனி டாஸ்மாக் ஊழியர்கள் 9 பேர் சென்னை அலுவலகத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்ச்சில் வருவாய்த்துறை சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடைபெறாமல் இருந்தது.
இதனால் தற்போது தேனி தாலுகா சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் முருகேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் பிரபாகரன், ஆண்டிப்பட்டி தாலுகா சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் செந்தில்முருகன் ஆகியோர் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதில் முருகேசன் மார்ச் 31ல், செந்தில்முருகனுக்கு ஏப்.,30ல் ஓய்வு பெறும் நாள் ஆகும். இருவரும் ஓய்வு பெறவில்லை.