/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ.,விற்கு துணை போன அ.ம.மு.க., அ.தி.மு.க.,விற்கு பாடம் புகட்டுங்கள் போடியில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் பிரசாரம்

ADDED : ஏப் 13, 2024 02:34 AM
போடி : பா.ஜ.,விற்கு துணை போன அ.ம.மு.க.,விற்கும், கள்ள கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க., விற்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார்.
போடியில் இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் போடியில் நடை பயண பிரசாரத்தில் பேசியதாவது:
2011 தேர்தலில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி நபர்களுக்கு வேலை வாய்ப்பும், வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். இப்போது வரை நிறைவேற்றவில்லை. காரணம் கேட்டால் கட்சத்தீவை காரணம் காட்டி திசை திருப்பி வருகிறார்.
காங்., ஆட்சியில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 26 ஆயிரமாக இருந்தது. தற்போது பா.ஜ., ஆட்சியில் ரூ. 56 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு விலை உள்ளது. பா.ஜ., வுடன் கூட்டணி வைத்து தினகரன் இங்கு போட்டியிடுகிறார். இங்கு உள்ள ஓ.பி.எஸ்., ராமநாதபுரம் சென்று போட்டியிடுகிறார்.
பா.ஜ., ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் எதிராக சட்டம் நிறைவேற்றிய போதும், குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு ஆதரவாக துணை போன கட்சி அ.தி.மு.க.,. பா.ஜ.,வுடன் நள்ளிரவு கூட்டணி வைத்து உள்ள அ.ம.மு.க., விற்கும், கள்ள கூட்டணி வைத்து உள்ள அ.தி.மு.க., விற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டும் வகையில் மக்கள் ஓட்டளிக்க வேண்டும், என பேசினார்.