/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
/
பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2024 05:34 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் செல்வராஜன், வணிக ஆட்சியல் துறை தலைவர் விஜயராஜ்யசிந்தியா, பேராசிரியர் பத்மபிரியா, பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவில் பேசினர்.
அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில் கல்வி சங்க செயலாளர் பாக்யகுமாரி தலைமை வகித்தார்.
பள்ளி முதல்வர் பரந்தாமன் முன்னிலை வகித்தார். பத்தாம் வகுப்பு மாணவர்களை நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்கள் சசிகலா, ஷாலினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
சீலையம்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சோமசுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு கவிதை, பேச்சுப்போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் சத்தியபிரபா நன்றி கூறினார்.
பெரியகுளம்: நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா மற்றும் வ.உ.சி., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். போலீஸ் மகாலட்சுமி ஆசிரியர்தினம் குறித்து பேசினார். மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகக்குழு உறுப்பினர் தேவபிரியா நன்றி கூறினார்.
ஆண்டிபட்டி: லிட்டில் பிளவர் பள்ளியில் ஆசிரியர் தின விழாவிற்கு தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தார். நிர்வாகி தமயந்தி முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். தேசிய நல்லாசிரியர் (ஓய்வு) தில்லை நடராஜன் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். பள்ளியின் செயலாளர் மாத்யூ ஜோயல் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, பாண்டிச்செல்வி, ராகினி, திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.