ADDED : பிப் 27, 2025 01:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் எம்.பில்., உயர்கல்வி பயின்று தணிக்கை தடையால் பாதிக்கப்பட்ட முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேனி சி.இ.ஓ., அலுவலகம் முன் நேற்று முன்தினம் மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் டோமினிக் லாரன்ஸ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
மாநில மகளிரணி செயலாளர் மஹபூப்பீவி, மாவட்ட நிர்வாகிகள் பாண்டித்துரை, ஆனந்தகுமரன், மகேந்திரன், கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

