நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் விஷ்வா 21, இவரது அண்ணன் ஹரிஷ் 24, சிறுவயதிலேயே இவர்களது தாயார் இறந்துவிட்டார்.
தந்தை வேறு திருமணம் செய்து கொண்டார். இருவரும் பாட்டியுடன் தெப்பத்துப்பட்டியில் வசித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் ஹரிஷ் குமார் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். 10 நாள் விடுமுறையில் பொங்கல் திருவிழாவிற்கு வந்திருந்தார். குடும்ப சூழ்நிலையை நினைத்து ஹரிஷ் குமார் அடிக்கடி மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இரு நாட்களுக்கு முன் மன உளைச்சலால் பூச்சி மருந்து குடித்து விட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் பலனின்றி இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.