/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாலிபர் தற்கொலை போலீசாருடன் வாக்குவாதம்
/
வாலிபர் தற்கொலை போலீசாருடன் வாக்குவாதம்
ADDED : ஜூன் 22, 2024 05:51 AM
கம்பம்: கம்பம் நெல்லுக்குத்தி புளிய மரத் தெருவை சேர்ந்தவர் சாய்குமார் 20. திருமணம் ஆகவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு இங்குள்ள மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் காயம் அடைந்து வீட்டில் சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டிற்கு பின்புறம் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு எடுக்க வந்த போதுஉறவினர்கள் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்,, மதுபான கடையில் சாய்குமாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர்.