ADDED : ஜூன் 01, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு தேவராஜ் நகரச் சேர்ந்தவர் செல்வம் மகன் சின்னமருது 26, தனக்கு திருமணம் முடித்து வைக்க குடும்பத்தினரிடம் வலியுறுத்தி வந்தார்.
பெண் அமையாததால் திருமணம் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் விரக்தியில் இருந்துள்ளார். நேற்று முன் தினம் பொங்கல் விழாவிற்காக அனைவரும் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாததால் சின்னமருது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தம்பி பாண்டீஸ்வரன் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.