ADDED : மே 31, 2024 06:40 AM

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சி கம்ப்போஸ்ட் ஓடைத் தெரு முத்துராஜ் மகன் ஹரிஹரன் 19.
இவர் முதலாம் ஆண்டு கல்லுாரியில் சேர்ந்து விடுமுறையில் தச்சு வேலை பார்க்க புதிப்புரம் ரோட்டில் உள்ள மர அறுவை மில்லில் வேலை பார்த்தார்.
இவருடன் அரண்மனைப்புதுார் முல்லைநகரை சேர்ந்த தச்சுத் தொழிலாளி அழகர்சாமியும் 21, பணிபுரிந்தார். இருவரும் நேற்று மதியம் பழனிசெட்டிபட்டி பூதிப்புரம் ரோட்டில் சாப்பாடு வாங்க நடந்து சென்றனர்.
அப்போது தேனியில் இருந்து பூதிப்புரம் சென்ற மினி பஸ்சை அன்னஞ்சியை சேர்ந்த டிரைவர் அஜித்குமார் 26, ஓட்டிச் சென்றார். மினிபஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ரோட்டில் ஓடியது.
நடந்து சென்ற ஹரிஹரன் 19, மீது மினிபஸ் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அழகர் சாமி, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பழனிசெட்டிபட்டி போலீசார் மினிபஸ் டிரைவர் அஜித்குமார் மீது வழக்குப்பதிந்து விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், டிரைவர் அஜித்குமார் வலிப்பு நோய் வந்ததால் விபத்து நடந்துள்ளது. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர்.