/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னந்தோப்பு வேலியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி -உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் ஆர்ப்பாட்டம்

ADDED : மே 16, 2024 06:13 AM

கூடலுார் : கூடலுார் அருகே குள்ளப்பகவுண்டன் பட்டியில் தென்னந்தோப்பு வேலியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான நிலையில், உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குள்ளப்பகவுண்டன்பட்டி கிருஷ்ணகுமார் 24. நேற்று ஒத்தக்களம் அருகே தனியார் தோட்டத்தில் வெங்காயம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் தண்ணீர் எடுப்பதற்காக அருகில் உள்ள தென்னந்தோப்பிற்கு அருகில் சென்றுள்ளார். அங்கு உள்ள வேலியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கூடலுார் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கிருஷ்ணகுமாரின் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் டி.எஸ்.பி., செங்கோட்டு வேலவன், கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி பேச்சுவார்த்தை நடத்தியும் இரவு 8:00 மணி வரை உடலை எடுக்க அனுமதிக்க வில்லை. அதன் பின் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கம்பம் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே நேற்று காலையில் அதே பகுதியில் மின்சாரம் தாக்கி எருமை மாடு இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.