sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண்கள் கழிப்பிடத்திற்கு தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத நிலை தென்கரை பேரூராட்சி சத்யா நகரின் அவலம்

/

பெண்கள் கழிப்பிடத்திற்கு தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத நிலை தென்கரை பேரூராட்சி சத்யா நகரின் அவலம்

பெண்கள் கழிப்பிடத்திற்கு தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத நிலை தென்கரை பேரூராட்சி சத்யா நகரின் அவலம்

பெண்கள் கழிப்பிடத்திற்கு தண்ணீர் இன்றி பயன்பாட்டிற்கு வராத நிலை தென்கரை பேரூராட்சி சத்யா நகரின் அவலம்


ADDED : ஜூலை 03, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம், : பெரியகுளம் ஒன்றியம், தென்கரை பேரூராட்சி, சத்யாநகரில் பெண்கள் கழிப்பிடம் கட்டி பல மாதங்களாகளாகியும் தண்ணீர் வசதி செய்யாததால் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் பெண்கள் ரோட்டோரங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது.

தென்கரை பேரூராட்சி முதல் வார்டாக உள்ளது.இந்த வார்டில் மூலக்கரை, சத்யா நகர், தீர்த்ததொட்டி, சோத்துப்பாறை அணை ஆகியவற்றை உள்ளடக்கியது. இப் பகுதியில் 1200க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகள் இன்றிமக்கள் அடைகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் ராவணன், ஆனந்தி, முரளி, அங்கயற்கன்னி ஆகியோர் குடியிருப்போர் குரல் பகுதிக்காக கூறியதாவது:

சத்யா நகரில் திறந்த வெளியில் சாக்கடை செல்வதால் கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் ரோடு சகதிகாடாக மாறிவிடுகிறது. பெரியகுளம் நியூகிரவுண்ட் முதல் சோத்துப்பாறை அணை ரோட்டில் 700 மீட்டருக்கு சாக்கடை கால்வாய் அமைக்க பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். இதுவரை சாக்கடை வசதி செய்து தரவில்லை. சத்யா நகர் அங்கன்வாடி மையத்தில் 20 க்கும் அதிகமான குழந்தைகள் வருகின்றனர். பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் அமைக்க வேண்டும். இங்கு உதவியாளர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

இப் பகுதியில் தெருவிளக்கு அடிக்கடி பழுதாகிறது. இதற்கு காரணம் தரமில்லாத மின் உபகரணங்கள் பயன்படுத்துவதே ஆகும்.

சோத்துப்பாறை அணை உள்ளடங்கிய இந்த வார்டில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கவில்லை. இதனால் உவர்ப்பு நீர் குடித்து வருகிறோம்.

உணவு சமைப்பதற்கு 1 கி.மீ., தூரம் சென்று குடிநீர் சுமந்து வரும் நிலை உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் அரசு

மாணவர் விடுதி முதல் அழகாமடை முனீஸ்வரன் கோயில் வரை தார் ரோடு அமைக்க கற்கள் மெத்தி 3 மாதமாகிறது. தார் ரோடு பணி நடைபெறவில்லை. இதனால் சத்யாநகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து கற்கள் மெத்திய ரோட்டில் நடந்து செல்வதால் கற்கள் காலில் குத்தி சிரமப்படுகின்றனர். இதனால் இந்தப்பகுதியிலிருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் வாகனங்களில் செல்ல முடியாமல் வைத்தியநாதபுரம் வழியாக ஒரு கி.மீ., சுற்றி செல்லும் நிலை உள்ளது.

சத்யா நகரில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டி முடித்து பல மாதங்களாகியும் தண்ணீர் வசதி செய்து தராமல் பயன் இன்றி உள்ளது. இதனை தண்ணீர் வசதி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர குறித்து இப்பகுதி மக்கள் பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை ரோட்டிற்கு கீழே இறங்கியுள்ளது. இதனால் பயன்பாடின்றி உள்ளது.

இதனை சீரமைப்பு செய்து நிழற்குடை வசதி செய்து தரவேண்டும். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இந்தப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை ரோட்டோரம் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள், நடைபயிற்சியாளர்கள் சிரமப்படுகின்றனர் என்றனர்.






      Dinamalar
      Follow us