/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடப்பிரச்னை தகராறு; ஆறு பேர் மீது வழக்கு
/
இடப்பிரச்னை தகராறு; ஆறு பேர் மீது வழக்கு
ADDED : ஆக 19, 2024 12:56 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி 50. இவரது சகோதரி பவுன்தாய் 38. இருவருக்கும் குப்பை போடுவது தொடர்பாக இடப் பிரச்னை இருந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே போலீசில் அளித்த புகாரில் இரு தரப்பினரையும் விசாரித்து, நீதிமன்றம் மூலம் பிரச்னையை தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அழகர்சாமி புகாரில் பவுன்தாய், பாண்டிச்செல்வம், ரேகா ஆகியோர் மீதும், வேல்தாய் புகாரில் லட்சுமி, அழகர்சாமி, ஆத்தீஸ்வரி ஆகியோர் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

