ADDED : ஆக 29, 2024 08:41 AM
கம்பம்: காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கம்பம் கிரீன்வேலி ரோட்டரி கிளப் சார்பில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கான தாய் சேய் நலத்திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ரோட்டரி கிளப் தலைவர் உதயசங்கர் தலைமை வகித்தார். கிளப் செயலாளர் ஜெய்சிங், பொருளாளர் தயாளன், சிறப்பு விருந்தினர்கள் கர்ணன், பேரூராட்சி தலைவர் வேல் முருகன் பங்கேற்று தாய்மார்களுக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட் மற்றும் பேரிச்சம் பழம், கிருமி நாசினிகள், பெட்ஷீட்டுக்களை வழங்கினார்கள் . சித்த மருத்துவ பிரிவு சார்பில் சதாவரி லேகியம், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் ரமேஷ், முருகானந்தன், மகப்பேறு சிறப்பு டாக்டர் சுதா, சித்தா டாக்டர் சிராசுதீன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், நர்சுகள் பங்கேற்றனர்.

