/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அங்கன்வாடி கட்டடம் சேதம் வீட்டில் செயல்படும் மையம்
/
அங்கன்வாடி கட்டடம் சேதம் வீட்டில் செயல்படும் மையம்
அங்கன்வாடி கட்டடம் சேதம் வீட்டில் செயல்படும் மையம்
அங்கன்வாடி கட்டடம் சேதம் வீட்டில் செயல்படும் மையம்
ADDED : செப் 03, 2024 04:29 AM

போடி, : போடி அருகே சிலமலை - மணியம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குழந்தைகளுக்கான அங்கன்வாடி மைய கட்டடம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
மணியம்பட்டி ரோட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர். கட்டடம் சேதம் அடைந்து, ஓராண்டிற்கு மேலாகியும் சீரமைக்காமல் உள்ளன.
அங்கன்வாடிக்கு முன்ரோடு வசதி இல்லாததால் சாக்கடை கழிவுநீர் தேங்கியதில் குப்பை கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. கட்டடத்தின் உள்ளே மழை நீர் கசிவு ஏற்படுகிறது. காற்று வீசும் போது குப்பை தூசிகள் பறந்து மையத்திற்குள் விழுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாததால் 7வது வார்டு கருப்பசாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் செயல்பட்டு வருகிறது. மையம் அமைந்துள்ள பகுதி தூரம் என்பதால் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
எனவே அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.