/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் வீணாவதை தடுக்க வாரியம் உள்ளாட்சிகள் நடவடிக்கை தேவை
/
குடிநீர் வீணாவதை தடுக்க வாரியம் உள்ளாட்சிகள் நடவடிக்கை தேவை
குடிநீர் வீணாவதை தடுக்க வாரியம் உள்ளாட்சிகள் நடவடிக்கை தேவை
குடிநீர் வீணாவதை தடுக்க வாரியம் உள்ளாட்சிகள் நடவடிக்கை தேவை
ADDED : மார் 05, 2025 06:44 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பாலான ஊர்களில் மெயின் பகிர்மான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதை தடுக்க உள்ளாட்சிகள், குடிநீர் வாரியம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனிலிருந்து கம்பம், கூடலூர், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற ஊர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கென 70 கி.மீ. தூரத்திற்கும் மேல் நெடுஞ்சாலையின் இரு புறமும் மெயின் பகிர்மான குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில் அருகில் பம்பிங் செய்து ஒடைப்பட்டி, தேவாரம் பகுதி கிராமங்களுக்கும் சப்ளையாகிறது. எல்லப்பட்டி, சீலையம்பட்டிக்கு அருகில் இருந்து பம்பிங் செய்து பல கிராமங்களுக்கு மெயின் பகிர்மான குழாய் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் பல பகுதிகளில் உள்ள பகிர்மான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. அடிக்கடி கம்பம் மெயின்ரோடு காந்தி சிலை எதிர்புறம், சேனை ஓடை, கம்பத்திற்கும் கூடலூருக்கும் இடையில் பல இடங்களில் என குடிநீர் வீணாகிறது. நகருக்குள்ளும்,வெளியிலும் குடிநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது . இதில் சில குழாய்கள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டிலும், சில வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இது தவிர சிலர் உடைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
எனவே குடிநீர் மெயின் பகிர்மான குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை கண்டறிந்து உடனுக்குடன் சரிசெய்து, குடிநீர் வீணாகாமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகளும், குடிநீர் வாரியம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.