/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்.,10ல் துவக்கம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்.,10ல் துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்.,10ல் துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்.,10ல் துவக்கம்
ADDED : செப் 08, 2024 04:51 AM
தேனி: மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் செப்., 10ல் துவங்குகிறது
முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் 5 பிரிவுகளாக நடக்கிறது. இதில் தடகளம், நீச்சல், சிலம்பம், கேரம், செஸ், கைப்பந்து, வாலிபால், கோ-கோ, கிரிக்கெட், இறகுப்பந்து, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. ஆன்லைனில் பதிவு செய்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வி நிலைய அடையாள அட்டை, சான்றிதழ், அரசு அலுவலர்கள் அலுவலக அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பொதுமக்கள் இருப்பிட சான்று உடன் பங்கேற்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அடையாள அட்டைகளுடன் ஆதார், விளையாட்டுகளுக்கு உரிய உபகரணங்கள் கொண்டு வர வேண்டும்.
கால்பந்து, கோ கோ தேனி என்.எஸ்., மேல்நிலைப்பள்ளி, கிரிக்கெட் போலீஸ் ஆயுதப்படை மைதானம், கேரம், செஸ் என்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. மற்ற போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு செப்., 10, கல்லுாரி மாணவர்களுக்கு செப்.,17, மாற்றுத்திறனாளிகளுக்கு செப்.,20, பொதுமக்களுக்கு செப்., 21, அரசு ஊழியர்களுக்கு செப்.,23ல் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் அல்லது 04546 -253 090 என்ற எண்ணில் பேசலாம். பதிவு செய்தவர்கள் பங்கேற்குமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.