/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் பரிந்துரைத்தும் திருட்டை கண்டு பிடிக்காமல் அலைக்கழிப்பு
/
கலெக்டர் பரிந்துரைத்தும் திருட்டை கண்டு பிடிக்காமல் அலைக்கழிப்பு
கலெக்டர் பரிந்துரைத்தும் திருட்டை கண்டு பிடிக்காமல் அலைக்கழிப்பு
கலெக்டர் பரிந்துரைத்தும் திருட்டை கண்டு பிடிக்காமல் அலைக்கழிப்பு
ADDED : ஆக 25, 2024 05:15 AM
பெரியகுளம்: கலெக்டர் பரிந்துரைந்தும் நகைத் திருட்டை கண்டுபிடிக்க போலீசார் ஆர்வம் காட்டததால் பாதிக்கப்பட்ட பெண் அலைக்கலைப்பட்டு வருகிறார்.
பெரியகுளம் தென்கரை பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் 46. இவர் குடும்பத்துடன் கடந்த மார்ச் 1ல் வெளியூர் சென்றிருந்தார். அப்போது மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவு 3பவுன் தங்க செயின், ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றனர். சம்பவம் நடந்த வீடு தென்கரை போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ளது. போலீசில் புகார் செய்தும் திருட்டை கண்டுபிடிக்கவில்லை. ஜூன் 19ல் பெரியகுளத்தில் நடந்த 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாமில் கலெக்டர் ஷஜீவனாவிடம், சசிக்குமார் மனைவி பஞ்சவர்ணம்,' மகள் கல்லூரி படிப்பு செலவுக்கு சேமித்த நகை திருடுபோனதை மீட்டு தர முறையிட்டார். கலெக்டர், தென்கரை இன்ஸ்பெக்டர் அமுதாவிடம்,'விரைவில் திருடனை கண்டுபிடித்து நகைகளை மீட்டெடுங்கள்' என்றார். பின் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண் இன்றுவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய், நடந்தாலும் பலன் இல்லை. கலெக்டர் உத்தரவிட்டும், திருட்டை கண்டுபிடிக்க போலீசார் ஆர்வம் காட்டாதது வேதனையாக உள்ளது.-

