/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியை தக்க வைத்த காங்., கூட்டணி 2வது முறையாக 'சிட்டிங்' எம்.பி., வெற்றி

ADDED : ஜூன் 05, 2024 01:48 AM

மூணாறு : இடுக்கி லோக்சபா தொகுதி காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட 'சிட்டிங்' எம்.பி. டீன் குரியா கோஸ் இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார்.
இடுக்கி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் 'சிட்டிங்' எம்.பி. டீன் குரியாகோஸ், இடது சாரி கூட்டணியில் ஜாய்ஸ்ஜார்ஜ், பா.ஜ., கூட்டணியில் சங்கீதா ஆகியோர் உள்பட ஏழு பேர் போட்டியிட்டனர். அதில் 'சிட்டிங்'எம்.பி. டீன் குரியாகோஸ் 4,32,372 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் டீன்குரியாகோஸ், ஜாய்ஸ்ஜார்ஜ் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் டீன் குரியாகோஸ் வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். கடந்த முறை இவர் 171053 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை 1,33,727 ஆக குறைந்தது. இடுக்கி தொகுதி நடந்த ஒன்பது தேர்தல்களில் காங்., கூட்டணி வெற்றி பெற்றது.
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள்: டீன்குரியாகோஸ் (காங்., கூட்டணி) 4,32,372, ஜாய்ஸ்ஜார்ஜ் (இடது சாரி கூட்டணி) 2,98,645, சங்கீதா (பா.ஜ.கூட்டணி) 91,323, ரஷல்ஜோய் (பி.எஸ்.பி) 4437, சஜிஷாஜி (வி.சி.க) 1508, ஜோ மோன்ஜான் (சுயேட்சை) 1819, சஜிவன் (சுயேட்சை) 1034.