/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'டாக்பியா' சங்கத்தினர் இன்று அடையாள வேலை நிறுத்தம்
/
'டாக்பியா' சங்கத்தினர் இன்று அடையாள வேலை நிறுத்தம்
'டாக்பியா' சங்கத்தினர் இன்று அடையாள வேலை நிறுத்தம்
'டாக்பியா' சங்கத்தினர் இன்று அடையாள வேலை நிறுத்தம்
ADDED : ஜூன் 03, 2024 03:42 AM
தேனி: மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில், 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் இன்று (ஜூன் 3ல்) அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளோம்.' என, சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது: ரேஷன் கடைகளுக்கு தேவையான பொருட்களை கடைப் பணியாளர்கள் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து எடுத்து வரும் நிலை உள்ளது. சில மாவட்டங்களில் இறக்குக்கூலி என ரூ.300 முதல் ரூ.1500 வரை கட்டாய வசூல் செய்யப்படுகிறது. கடைகளுக்கு வினியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மூடைக்கு 5 கிலோ வரை எடை குறைவாக வருகிறது. இதனை தவிர்க்க கடைகளில் இறக்கும் போது அதிகாரிகள் உடனிருந்து எடையை சரிபார்க்க வேண்டும். ரேஷன் கடைகளில் உள்ள பி.ஓ.எஸ்., பழுது ஏற்பட்டால் விற்பனையாளர்கள் சொந்த செலவில் சீரமைக்கும் நிலை உள்ளது. இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.
மாதாந்திர ஆய்வு கூட்டம் என சில அதிகாரிகள் வசூலில் ஈடுபடுகின்றனர். பணியாளர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.6,250 மட்டும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் சங்கத்தினர் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜூலை 8 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என, தெரிவித்தனர்.