/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்புகள் ஏழு ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை
/
சேதமடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்புகள் ஏழு ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை
சேதமடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்புகள் ஏழு ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை
சேதமடைந்த வேளாண் அலுவலர் குடியிருப்புகள் ஏழு ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை
ADDED : ஜூன் 20, 2024 05:26 AM

தேனி: தேனி ஒன்றியத்தில் உதவி வேளாண் அலுவலர்களுக்கான குடியிருப்புக்கள் சேதமடைந்து பராமரிப்பு இன்றி உள்ளது. இதனை இடித்து அகற்றி விட்டு புதிய குடியிருப்புகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி ஒன்றியத்தில் ஜங்கால்பட்டி, உப்பார்பட்டி, தப்புக்குண்டு, காட்டுநாயக்கன்பட்டி, சீலையம்பட்டி, கோட்டூர் பகுதிகளில் வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளுக்கு தேவையான ஈடுபொருட்கள், உரங்கள், விதைகள், ஆலோசனை பெற்று, உற்பத்தியை அதிகரித்து வந்தனர். வேளாண் விரிவாக்க மையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கு தங்குவதற்கு குடியிருப்புக்கள் கட்டப்பட்டன. 2017 க்கு பின் தேனி ஒன்றியத்தில் உள்ள ஆறு ஊர்களில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களின் குடியிருப்புகள் சிதிலமடைந்து சேதமடைந்துள்ளன. மேலும் அலுவலர்கள் தங்குவதற்கு தகுதியற்ற குடியிருப்புகளாக உள்ளன. இதனை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட 2017 ல் விபரம் சேகரித்து மாநில வேளாண்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் பின் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து ஆண்டுதோறும் விபரங்கள் சேகரித்து பெறும் வேளாண் துறை புதிய கட்டடம் கட்டுவதற்கு தாமதப்படுத்தி வருகிறது. விரைவில் புதிதாக கட்டடம் கட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.