/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரக்கூடத்தை செயல்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
/
உரக்கூடத்தை செயல்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
உரக்கூடத்தை செயல்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
உரக்கூடத்தை செயல்படுத்தாமல் குப்பைக்கு தீ வைக்கும் அவலம்
ADDED : ஆக 09, 2024 12:34 AM

போடி: போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உள்ள நுண் உரக்கூடத்தை முழுமையாக செயல்படுத்த இயலாமல் சேகரமாகும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் வெளியேறும் புகையால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர்.
போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பையை மறுசுழற்சி செய்ய திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆனால் இங்குள்ள நுண் உரக்கூடம் பெரிய அளவில் இல்லாததால் முழுமையாக செயல் படுத்தப்படாமல் உள்ளன.
இதனால் பேரூராட்சியில் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகே கொட்டி தீ வைத்து வருகின்றனர். இதனால் வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
ரோட்டில் செல்லும் பொதுமக்கள், சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் சுவாச பிரச்னையால் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும், சேகரமாகும் குப்பைகளை மெயின் ரோட்டோரம் கொட்டி தீ வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.