/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் நடத்தை விதியை காரணம் கூறி 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் முடக்கம்
/
தேர்தல் நடத்தை விதியை காரணம் கூறி 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் முடக்கம்
தேர்தல் நடத்தை விதியை காரணம் கூறி 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் முடக்கம்
தேர்தல் நடத்தை விதியை காரணம் கூறி 'டிஜிட்டல் எக்ஸ்ரே' வாகனம் முடக்கம்
ADDED : மே 17, 2024 06:51 AM
கம்பம் : மொபைல் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச காசநோய் தடுப்பு அமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் காசநோய் தடுப்பிற்கான உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் காச நோய் தடுப்பு மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. மத்திய அரசு வழங்கி வந்த மருந்து மாத்திரைகள் திடீரென நிறுத்தப் பட்டன. தற்போது சப்ளை சீராகி உள்ளதாக தெரிகிறது.
தேனி மாவட்டத்திற்கு காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ் ரே வாகனம் கிராமந்தோறும் சென்று எக்ஸ்ரே எடுத்து காசநோய் கண்டறிய பயன்பட்டு வருகிறது.
இப்போது எங்கு மருத்துவ முகாம் நடைபெற்றாலும் நடமாடும் எக்ஸ்ரே வண்டி கொண்டு செல்லப்படுகிறது. காசநோய் உள்ளதா என்பது மட்டுமே இந்த கருவியால் பார்க்க முடியும். வேறு விதமான எக்ஸ்ரே எடுக்க முடியாது,
இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடப்பதால், நடத்தை விதிகளை காரணம் காட்டி எக்ஸ் ரே வாகனத்தை கிராமங்களுக்கு செல்ல விடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். தற்போது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்படுகிறது.
ஆனால் மருத்துவ முகாம்களுக்கோ, கிராமங்களுக்கோ அனுமதிக்கப்படவில்லை.
உயிர் காக்கும் மருத்துவத்திற்கு போர் காலங்களில் கூட விலக்கு அளிக்கப்படுகிறது . ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி எக்ஸ்ரே வாகனத்தை முடக்கி உள்ளது சரிதானா என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் தேர்தலும் முடிந்து விட்டது. எனவே கலெக்டர், தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெற்று டிஜிட்டல் மொபைல் எக்ஸ்ரே வாகனம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

