/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு ஊழியர், ஆசிரியர் சங்க மனநிலை கடைசி நேரத்தில் சரிக்கட்ட தி.மு.க.,முயற்சி
/
அரசு ஊழியர், ஆசிரியர் சங்க மனநிலை கடைசி நேரத்தில் சரிக்கட்ட தி.மு.க.,முயற்சி
அரசு ஊழியர், ஆசிரியர் சங்க மனநிலை கடைசி நேரத்தில் சரிக்கட்ட தி.மு.க.,முயற்சி
அரசு ஊழியர், ஆசிரியர் சங்க மனநிலை கடைசி நேரத்தில் சரிக்கட்ட தி.மு.க.,முயற்சி
ADDED : ஏப் 16, 2024 05:02 AM
கம்பம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மனநிலையில் மாற்றம் இருப்பதை தெரிந்து கொண்ட தி.மு.க. கடைசி நேரத்தில் சரிக்கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிகிறது. ஏப். 19ல் தேர்தல் நடைபெறுகிறது. தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் பண பலம், படை பலம், அதிகார பலம் உள்ளிட்ட அனைத்து பலங்களும் பிரயோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் தனக்குள்ள பலவீனத்தை மறைத்து, பலத்தை காட்டி வருகிறது. பொதுவாக தேர்தல்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒட்டுக்கள் முக்கிய பங்காற்றும்.
கடந்த சட்டசபை - தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க., நிறைவேற்றவில்லை என்ற கோபம் அரசு ஊழியரிகள், ஆசிரியர்களிடம் உள்ளது . இது தி.மு.க. விற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க காரணியாக உள்ளது. குறிப்பாக பழைய ஒய்வூதிய திட்டம் வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாகும். ஆளும் தி.மு.க., அதை நிறைவேற்றவில்லை.
எனவே,தி.மு.க. விற்கு எதிராக திரும்புகின்றனர் என்றவுடன், இடதுசாரி தலைவர்கள் மூலம் அவர்களை சரிக்கட்டும் வேலையை தி.மு.க. மேற்கொண்டுள்ளது. பா.ஜ. வின் தேசிய கல்வி கொள்கையில் ஒரே சம்பளம், மகப்பேறு விடுமுறை ரத்து போன்ற பாதகமான அம்சங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, இந்த ஒரு முறை தி.மு.க. விற்கு ஒட்டளிக்க இடதுசாரி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது எந்த அளவிற்கு எடுபடும் என்பது தெரியவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது மதில்மேல் பூனையாக உள்ளது.

