/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிணறு அருகே துாங்கிய விவசாயி தவறி விழுந்து பலி
/
கிணறு அருகே துாங்கிய விவசாயி தவறி விழுந்து பலி
ADDED : மே 08, 2024 04:57 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி ஒன்றியம் அனுப்பப்பட்டி தெற்கு தெரு விவசாயி பொன்ராஜ் 47, இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.
விவசாயி அனுப்பப்பட்டி நத்தக்குளம் அருகே இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மதியம் ஓய்வுக்காக தடுப்புச்சுவர் இல்லாத கிணறு அருகே மரத்தடியில் படுத்துள்ளார்.
அசதியில் தூங்கிய அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று தண்ணீரில் இருந்து அவரை மீட்டனர்.
கிணற்றில் இருந்த திட்டில் மோதியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் உடலை பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

