/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., அ.-தி.மு.க., கூட்டணி கட்சியினரின் களப்பணி குறைவு
/
தி.மு.க., அ.-தி.மு.க., கூட்டணி கட்சியினரின் களப்பணி குறைவு
தி.மு.க., அ.-தி.மு.க., கூட்டணி கட்சியினரின் களப்பணி குறைவு
தி.மு.க., அ.-தி.மு.க., கூட்டணி கட்சியினரின் களப்பணி குறைவு
ADDED : ஏப் 03, 2024 07:12 AM
கம்பம் : தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் களப்பணி பங்களிப்பு குறைவாக வ உள்ளது.
தேனி லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வில் தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க., நாராயணசாமி, அ-.ம.மு.க., தினகரன், நா.த., மதன் போட்டியிடுகின்றனர்.
4 வேட்பாளர்களும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் தினகரன் தனது மனைவியை களம் இறக்கி விட்டுள்ளார்.
தி.மு.க கூட்டணியில் காங். இடதுசாரிகள், வி. சி.க., இ.மு. லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அ.ம.மு.க. கூட்டணியில் பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
பிரசாரத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரு கட்சியிலும் கூட்டணி கட்சிகள் பங்களிப்பு மிக குறைவாகவே உள்ளது. அ.ம.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ. மட்டும் கூட்டணிக்காக பாடுபடுகிறது.
தி.மு.க., அ.தி.மு.க.,வில் அதன் நிர்வாகிகளும், தொண்டர்கள் மட்டுமே களப்பணியாற்றுகின்றனர்.
பிற கூட்டணி கட்சியினர் ஏனோ தானோ என பெயரளவில் வந்து செல்லும் மனநிலையில் உள்ளனர்.

