/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளாவில் 2.72 கோடி வாக்காளர்கள் இறுதி பட்டியல் ஏப்.4ல் வெளியீடு
/
கேரளாவில் 2.72 கோடி வாக்காளர்கள் இறுதி பட்டியல் ஏப்.4ல் வெளியீடு
கேரளாவில் 2.72 கோடி வாக்காளர்கள் இறுதி பட்டியல் ஏப்.4ல் வெளியீடு
கேரளாவில் 2.72 கோடி வாக்காளர்கள் இறுதி பட்டியல் ஏப்.4ல் வெளியீடு
ADDED : மார் 23, 2024 06:06 AM
மூணாறு: கேரளாவில் மார்ச் 18ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 2,72, 80,160 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநிலத்தில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏப்.26ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மாநிலத்தில் 25,358 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அதில் 555 ஓட்டு சாவடிகளை பெண்கள் மட்டும் கையாளுகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி மார்ச் 18ல் வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி 2,72,80, 160 வாக்காளர்கள் உள்ளனர். அதில் நூறு வயதை கடந்தவர்கள் 2999, 85 வயதை கடந்தவர்கள் 2,49,960 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்.4ல் வெளியிடப்படும். அதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்ற போதும், அதற்கான விண்ணப்பத்தை மார்ச் 25 க்கு முன்பாக வழங்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் எம். கவுல் தெரிவித்தார்.
பெரிய தொகுதி: மாநிலத்தில் இடுக்கி தொகுதி இரண்டு மாவட்டங்களில் 7 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய தொகுதியாகும். இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன் சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா, எர்ணாகுளம் மாவட்டத்தில் மூவாற்றுபுழா, கோதமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளை கொண்டதாகும். மார்ச் 18ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி இடுக்கி லோக்சபா தொகுதியில் ஆண்கள் 6,08 , 710, பெண்கள் 6, 28,040, இதர பிரிவினர் 9 என 12,36,759 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதியில் மிகவும் கூடுதலாக தொடுபுழா சட்ட சபை தொகுதியில் 1,88,844, மிகவும் குறைவாக தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 1, 65, 514 வாக்காளர்கள் உள்ளனர்.

