/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்தது
/
கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்தது
ADDED : ஏப் 01, 2024 06:39 AM

பெரியகுளம் : கோடை வெயிலின் தாக்கத்தால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியான வட்டக்கானல், வெள்ளகெவியில் பெய்யும் மழை, கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
கோடை வெயில் தாக்கத்தால் மார்ச் 20 முதல் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று வார விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்தனர். அருவியில் வரிசையாக நின்று குளித்தும், அருவியின் முன் பகுதியில் தேங்கிய தண்ணீரில் நீந்தி குளித்தனர்.
சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேசவராஜ், ராணி கூறுகையில்: கொடைக்கானல் சென்று விட்டு ஊருக்கு செல்லும் வழியில் கும்பக்கரை அருவிக்கு வந்தோம். தண்ணீர் குறைவு என்றாலும் குளிப்பதற்கு ஆனந்தமாக இருந்தது என்றனர்.

