/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்று நாட்களுக்கு பறக்கும் படை சுற்றிக்கொண்டே இருக்க உத்தரவு
/
மூன்று நாட்களுக்கு பறக்கும் படை சுற்றிக்கொண்டே இருக்க உத்தரவு
மூன்று நாட்களுக்கு பறக்கும் படை சுற்றிக்கொண்டே இருக்க உத்தரவு
மூன்று நாட்களுக்கு பறக்கும் படை சுற்றிக்கொண்டே இருக்க உத்தரவு
ADDED : ஏப் 17, 2024 05:40 AM
கம்பம், : தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க ஏப். 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் சுற்றிக் கொண்டே இருக்க பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வெற்றி பெற மூன்று வேட்பாளர்களும் முழு வீச்சில் களப்பணியாற்றி வருகின்றனர். பிரசாரம் முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் ஒட்டுக்களுக்கு பட்டுவாடா செய்வார்கள். எனவே, ஒட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். மூன்று நாட்கள் இன்று முதல் (ஏப். 17, 18, 19) வரை பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர களப் பணியாற்றவும்,பறக்கும் படை வாகனங்களுக்கு 3 நாட்களுக்கான எரிபொருள் 'டேங்க் புல்' பண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், தெருக்கள், குறுகிய வீதிகளிலும் ரோந்து செல்ல கூறியுளளனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் இந்த உத்தரவை தொடர்ந்து பறக்கும் படை வாகனங்கள் ஊருக்குள் வீதி உலா வர துவங்கி உள்ளன.

