/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் மீண்டும் குடியேறிய விவசாயிகள் வெளியேறும்படி வனத்துறையினர் பேச்சு
/
குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் மீண்டும் குடியேறிய விவசாயிகள் வெளியேறும்படி வனத்துறையினர் பேச்சு
குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் மீண்டும் குடியேறிய விவசாயிகள் வெளியேறும்படி வனத்துறையினர் பேச்சு
குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் மீண்டும் குடியேறிய விவசாயிகள் வெளியேறும்படி வனத்துறையினர் பேச்சு
ADDED : செப் 26, 2024 10:32 PM

கூடலுார்:குமுளி அருகே தமிழக வனப்பகுதியிலுள்ள ஆசாரிபள்ளத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க கோரி மீண்டும், 25 விவசாயிகள் வனப்பகுதிக்குள் குடியேறினர். அவர்கள் அங்கிருந்து வெளியேற வனத்துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
குமுளி அருகே தமிழக வனப்பகுதி ஆசாரிப்பள்ளம், அமராவதிபுரத்தில் ஏலம், மிளகு, பலா சாகுபடியை விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக செய்து வந்தனர். 1992ல் வனப்பகுதிக்குள் இருந்த இவர்களை வனத்துறையினர் வெளியேற்றினர்.
அதன்பின் மீண்டும் விவசாயம் செய்ய வனப்பகுதிக்குள் அவர்கள் குடியேறினர். 1997ல் விவசாயம் செய்து வந்த, 40க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களை இரண்டாவது முறையாக வனத்துறையினர் வெளியேற்றினர்.
* விவசாயிகள் வழக்கு
வனப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிக்கக் கோரி விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது. அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதால் வனப்பகுதிக்குள் விவசாயம் செய்ய வனத்துறையினர் அனுமதிக்கவில்லை.
கடந்த 2022 ஜூலை 2ல் நான்கு பெண்கள் உட்பட 22 விவசாயிகள் ஆசாரிப்பள்ளம் வனப்பகுதிக்குள் மீண்டும் விவசாயம் செய்ய அனுமதிக்க கோரி அங்கு முகாமிட்டனர். வனத்துறையினர் பேச்சு நடத்தியும் இரண்டு நாட்கள் வரை அவர்கள் வெளியேறவில்லை. இரவிலும் அப்பகுதியில் தங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்திய வனத்துறையினர், '2006 வனச்சட்டம் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாசிகளின் கீழ் வாழ்வாதாரத்திற்காகவும் சுய சாகுபடிக்காகவும் வாழ்வுரிமை கோரி விண்ணப்பம் தயார் செய்து, லோயர்கேம்ப் கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பித்தபின் இது தொடர்பாக பரிசீலிக்கப்படும்' என கூறியதையடுத்து அவர்கள் வெளியேறினர்.
* வனத்துறை பேச்சு
இந்நிலையில், வனத்துறையினர் ஆலோசனையின்படி கிராம சபை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினர். இதனையடுத்து நேற்று முன்தின் காலை மீண்டும் 25 விவசாயிகள் ஆசாரிப்பள்ளம் வனப்பகுதிக்குள் விவசாயம் செய்ய குடியேறினர்.
இதையறிந்த வனத்துறையினர் அங்கிருந்து வெளியேறும்படி அவர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனால் நேற்று முன்தினம் மாலை வரை சுமூக முடிவு எட்டப்படவில்லை.