/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதே இலக்கு
/
காலி இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதே இலக்கு
ADDED : மே 13, 2024 06:58 AM

கம்பம் நாகமணியம்மாள் பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மூலம் கிடைக்கும் இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதே இலக்கு என்ற கருப்பொருளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுத்து பிற பள்ளிகளுககு முன்னுதாரணமாக திகழ்கிறது. இப்பள்ளியின் மாணவர்கள் பொது மக்களின் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கம்பம் வீதிகளில் இடம் இருந்த போதும் மரங்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் பொது மக்களுக்கு ஆர்வம் இல்லை.
தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் களம் இறங்கிய போதும், மாசுபடுவதை தடுக்க முடியவில்லை. மாறாக மரக்கன்றுகள் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் தான் மாசில்லா நிலை குறையும்.
கம்பம் நந்தகோபாலசாமி நகர், காந்தி நகர், சி.எம்.எஸ்.நகர், நந்தனார் காலனி, நாட்டுக்கல், பாரதியார் நகர், காள வாசல், உள்ளிட்ட பல விரிவாக்கப் பகுதிகளில் மரங்கன்றுகள் வளர்க்க துவங்கி உள்ளனர். இங்குள்ள பள்ளிகளில் முதல் வகுப்பு மாணவர்கள் முதல் 10 ம் வகுப்பு மாணவர்கள் வரை மரக்கன்று நட்டு வளர்ப்பது எப்படி என்று விளக்கி தினமும் ஒரு மணி நேரம் களப்பயிற்சி தருகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு அருகில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகள் வளர்க்க எப்படி குழி தோண்ட வேண்டும், மரக்கன்றுகளை எவ்வாறு நடவு செய்வது, ஒவ்வொரு மரக்கன்றுக்கும் தண்ணீர் பாய்ச்சும் முறை, தொடர்ந்து மரக்கன்றுகள் வளரும் வரை பராமரிப்பது எப்படி, ஒவ்வொரு மரமும் தரும் பலன்கள் என மாணவ மாணவிகளுக்கு அடிப்படை விஷயங்களை விளக்கி கூறி வருகின்றனர். இதன் மூலம் மாணவ மாணவிகள் மத்தியில் மரக்கன்றுகள் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட்டுள்ளன. கம்பத்தின் 33 வார்டுகளிலும் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்.