/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.13 லட்சத்தில் கட்டிய கிராம சந்தை திறப்பு; விழாவுடன் முடங்கிய அவலம் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு
/
ரூ.13 லட்சத்தில் கட்டிய கிராம சந்தை திறப்பு; விழாவுடன் முடங்கிய அவலம் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு
ரூ.13 லட்சத்தில் கட்டிய கிராம சந்தை திறப்பு; விழாவுடன் முடங்கிய அவலம் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு
ரூ.13 லட்சத்தில் கட்டிய கிராம சந்தை திறப்பு; விழாவுடன் முடங்கிய அவலம் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : பிப் 15, 2025 06:41 AM

பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராமசந்தை 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராததால் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளது. மின் கட்டணம் ரூ.30 ஆயிரம் செலுத்தாததால் மின் இணைப்பை துண்டித்தது.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட முந்தைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை இடித்துவிட்டு, ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கிராம சந்தை 2021ல் கட்டப்பட்டது. ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் 8 கடைகள், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இந்த கிராம சந்தை தாமரைக்குளம், டி. கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, ஜெட்லூர், சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகளை கிராம விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் 'நானே விவசாயி நானே வியாபாரி' கூட்டமைப்பை உருவாக்கி கிராமச்சந்தையில் கடைகள் அமைக்க ஆர்வம் காட்டினர். 8 கடையில் 2 ல் மளிகை பொருட்கள் விற்பது எனவும் முடிவானது.
இவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டமும் தயாரானது. அடுத்தடுத்து பி.டி.ஓ.,க்கள் மாற்றத்தால் ஒன்றிய அலுவலகம் கடைகளை வாடகைக்கு விட ஆர்வம் காட்டவில்லை. இதனால் தற்போது வரை வாரச்சந்தை பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியது.
குப்பைமேடாக உள்ளது. சந்தைக்கு மின் கட்டணம் ரூ.30 ஆயிரம் செலுத்த வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. ஒன்றிய நிர்வாகம் பயன்பாடு இல்லாத சந்தைக்கு மின் கட்டணம் செலுத்தததால் மின் இணைப்பை துண்டித்து, மின் மீட்டரை கழற்றி சென்றது.
திறப்பு விழாவுடன் முடங்கிய திட்டம்
சத்தியமுர்த்தி, டி.கள்ளிப்பட்டி: கிராம சந்தை கட்டடம் திறப்பு விழாவுடன் முடங்கியது. இப் பகுதி விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
இந்த சந்தை பயன்பாட்டிற்கு வந்தால் லட்சுமிபுரம் வரை கிராமத்தினர் குறைந்த விலையில் காய்கறிகள் வாங்கி செல்வதற்கு ஏதுவாக இருக்கும். பயன்பாட்டிற்கு வராததால் 6 மாதங்களுக்கு பிறகு இந்த கட்டடத்தில் ஒவ்வொரு பொருட்களாக திருடுபோக துவங்கியது. தற்போதைய பெரியகுளம் ஒன்றிய பி.டி.ஓ., க்கள் கிராம சந்தையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக விரோத செயல் தாராளம்
மருதுபாண்டி, டி.கள்ளிப்பட்டி : புதிய கிராமசந்தை கட்டடம் காலை முதல் இரவு வரை 24 மணி நேரமும் மது மற்றும் கஞ்சா விற்பனை களை கட்டியுள்ளது. சுகாதார வளாகம் மின் மோட்டார் திருடு போனது. 8 கடைகளிலும் தினமும் நூற்றுக்கணக்கான காலி மது பாட்டில்களை கிடக்கிறது. சிலர் மது குடித்து விட்டு அங்கேயே உறங்கி செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்தப்பகுதியை கடந்து செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--