/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் பணியில் உள்குத்து பிரச்னை; வேட்பாளர்களுக்கு பெரும் தலைவலி
/
தேர்தல் பணியில் உள்குத்து பிரச்னை; வேட்பாளர்களுக்கு பெரும் தலைவலி
தேர்தல் பணியில் உள்குத்து பிரச்னை; வேட்பாளர்களுக்கு பெரும் தலைவலி
தேர்தல் பணியில் உள்குத்து பிரச்னை; வேட்பாளர்களுக்கு பெரும் தலைவலி
ADDED : ஏப் 11, 2024 06:28 AM
கம்பம் : தேர்தலில் உள்குத்து பிரச்சனையால் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தலைவலியாக உள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் 4 அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு அதில் பயணிக்கிறது. அரசியல் கட்சிகள் என்றாலே கோஷ்டி பூசல் இருப்பது வாடிக்கையானது தான். அந்த கோஷ்டி பூசல் இந்த தேர்தலில் எதிரொலிக்கிறது.
தேனி தொகுதியில் கோஷ்டி பூசலில் முதலிடம் வகிப்பது தி.மு.க. மட்டுமேயாகும். வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் அந்தந்த மாவட்டத்திற்குள்ளேயும் பல்வேறு கோஷ்டிகளாக உள்ளன.
தி.மு.க. தலைமை எச்சரித்துள்ளதால், தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். அவர்களது பணியில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.
அ.தி.மு.க. விலும் இந்நிலை உள்ளது. உதாரணத்திற்கு மாவட்ட செயலாளர் ஒருவரின் வாரிசை ஹவுஸ் அரஸ்ட் செய்யும் அளவிற்கு கோஷ்டி பூசல் உள்ளது. அ.ம.மு.க.,விற்கு உட்கட்டமைப்பு வீக்காக உள்ளது. ஆனால் கூட்டணி கட்சியான பா.ஜ. பலமானதாக உள்ளது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் தொகுதி முழுவதும் பரவலாக உள்ளனர். ஆனால் இவர்களுக்குள் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. மாறாக வெளி மாவட்டத்தினர் இறக்குமதி செய்துள்ளார். அவர்களையே நம்புகிறார்.
நா.த.வில் கோஷ்டி இல்லை. எனவே உள்குத்து வேலைகளால் எல்லா கட்சிகளுக்கும் அதன் திறனுக்கேற்ப சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது.

