ADDED : மே 31, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு காலனியைச் சேர்ந்தவர் விஜய் 32. இவர் ரோட்டோரக் கடைகளை குறிவைத்து திருடி வந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு மாட்டுபட்டி ரோட்டில் வனத்துறை பூந்தோட்டம் எதிரே ராஜாவின் கடையில் இரவில் நுழைந்த விஜய் கைவினை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை திருடினார். அக்காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதனை போலீசார் ஆய்வு செய்தபோது கடையில் திருடியது விஜய் என தெரியவந்தது.
இதே கடையில் அவர் ஏற்கனவே ஒருமுறை திருடியுள்ளார். போதமேடு பகுதியில் பதுங்கி இருந்த விஜயை மூணாறு எஸ்.ஐ. ஜிதேஷ் கே. ஜான் தலைமையில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் திருடிய ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அடிமாலி அருகே விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. அது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.