ADDED : மே 03, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஆண்டனி 29, அப்பதியில் திருடிய டூவீலரில் ஏப்.12ல் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். மூணாறில் சுற்றுலாவை முடித்து விட்டு திரும்புகையில், பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் திருட்டு டூவீலரை விட்டு விட்டு, அப்பகுதியைச் சேர்ந்த முஷீப்அப்பாஸின் டூவீலரை திருடிச் சென்றார்.
இந்நிலையில் எர்ணாகுளம் மரடு போலீசாரிடம் சிக்கிய ஆண்டனியை, மூணாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மூணாறு இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் கைது செய்தனர்.