/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி விழா துவங்கியது
/
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி விழா துவங்கியது
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி விழா துவங்கியது
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி விழா துவங்கியது
ADDED : பிப் 27, 2025 01:21 AM

தேவதானப்பட்டி; தேவதானபட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக துவங்கியது.
இக்கோயில் தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜைகள் நடக்கின்றன. தீபாராதனைக்கு முன் தேங்காய் உடைக்கப்படுவது இல்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை.
குடங்களில் நிறைந்துள்ள நெய்யினை எறும்புகள் நெருங்குவதும் இல்லை. பகலிரவு அணையாத நெய்விளக்கு எரிந்து கொண்டே இருப்பது சிறப்பாகும். மேலும் குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குலதெய்வமாக நினைத்து வணங்கி வருவது தொன்று தொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது.
பிப்., 4ல் கொடிமரம் நடப்பட்டு, நேற்று முதல் திருவிழா கோலாகலமாக துவங்கியது. மார்ச் 5 வரை 8 நாட்கள் திருவிழா நடக்கிறது.
பக்தர்கள் வசதிக்காக 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் முகம் சுழிப்பு
கோயிலில் சில பூஜாரிகள் அதிகளவில் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் மாலை மரியாதை செலுத்தியும், மற்றவர்களுக்கு விபூதி வழங்க தயங்குகின்றனர். மேலும் தோஷம் கழிப்பதாகவும், சில உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கின்றனர். செயல் அலுவலர் வேலுச்சாமி, 'சம்பந்தப்பட்ட பூஜாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் தெரிவித்தனர்.
இடையூறு
கோயில் நுழைவாயில், வளாகத்தில் சில திருநங்கைகள் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். மஞ்சளாற்றின் கரையில் பெண்கள் ஆடை மாற்றும் இடத்தில் பாதுகாப்பிற்கு ஒரு பெண் போலீசார் கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது.