/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண் துாசிகளுடன், புழுக்கள் கலந்த குடிநீர் விநியோகம் சிரமத்தில் போடி சுந்தரராஜபுர மக்கள்

ADDED : மே 08, 2024 05:10 AM

போடி, : போடி அருகே சுந்தரராஜபுரத்தில் மண் தூசிகளுடன், புழுக்கள் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் சல்லடை வைத்து குடிநீர் பிடித்து பருகும் நிலையில் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சுந்தரராஜபுரம். இப்பகுதியில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். உப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், மீனாட்சியம்மன் கண்மாய் நீரை பம்பிங் செய்து அதன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது கண்மாயில் நீர்வரத்து குறைந்து உள்ள நிலையில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன் கழிவுகளின் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் கண்மாய் மூலம் பம்பிங் செய்யப்படும் நீரை முறையாக சுத்திகரிக்கப்படாத நிலையில் மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் துர்நாற்றத்துடனும், தூசிகளுடனும் மண் கலந்த கலங்கிய குடிநீராக வினியோகம் ஆகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சல்லடை, துணிகள் மூலம் வடிகட்டி தண்ணீர் பிடித்து பருகும் அவல நிலை நீடிக்கிறது. இதனால் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படும் அவல நிலை நீடித்து வருகிறது.
இதுகுறித்து அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. குடிநீரை முறையாக சுத்திகரித்து சுகாதாரமான முறையில் வினியோகம் செய்திட போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.