/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்
/
தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்
தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்
தேர்தல் அலுவலகங்கள் திறப்பில் மூன்று துறைகள் அனுமதி அவசியம்
ADDED : மார் 29, 2024 05:55 AM
கம்பம் : தேர்தல் அலுவலகங்களை திறக்க மூன்று துறைகளிடம் அனுமதி பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. தி.மு.க. அ.தி.மு.க. அ.ம.மு.க. போன்ற கட்சிகள் ஊர் ஊருக்கு தேர்தல் அலுவலகங்களை திறந்துள்ளன.
இவர்கள் யாரிடமும் அனுமதி பெறாமலே பந்தல் அமைத்து, கொடிகளை கட்டி உள்ளனர்.
இப்போது அனுமதி பெற ஆன் லைனில் விண்ணப்பித்துள்ளனர். பந்தல் அமைக்க பொதுப்பணித்துறை, போலீஸ், தீயணைப்பு துறை என மூன்று துறைகளின் தடையில்லா சான்று தேவை.
இதில் போலீஸ் மற்றும் பொதுப்பணி துறை ஒகே சொல்லி விடுகின்றனர். தீயணைப்புத் துறை தாமதிக்கின்றனர்.
காரணம் பெரும்பாலும் தேர்தல் அலுவலகங்கள் தென்னை ஓலைகளால் பந்தல் அமைக்கின்றனர். இவை எளிதில் தீப்பற்ற கூடியது என்பதால் , ஆட்சேபனை செய்கின்றனர்.
தென்னை ஓலை இருந்தால் அனுமதி மறுக்கின்றனர்.
இது அரசியல் கட்சிகளுக்கு தலைவலியாக உள்ளது. பந்தல் களை காலி செய்து விட்டு தகரம் போடும் பணி செய்ய தயாராகி வருகின்றனர்.