ADDED : ஜூலை 31, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு, : அடிமாலி அருகே மச்சிபிளாவ் பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் 63. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஓடையில் கால் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார், அவரது உடலை நேற்று மீட்டனர்.