ADDED : ஆக 30, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு அருகே ஆனச்சாலில் விற்க முயன்ற யானை தந்தங்கள் வளர்ப்பு யானைகளுடையது என தெரியவந்ததுடன், அவற்றை கொடுத்தவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
மூணாறு அருகே போதமேடு பகுதியைச் சேர்ந்த டிஞ்சுகுட்டன் 29, மணி 36, ஆகியோர் யானை தந்தங்களை விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அவற்றை வாங்குவது போன்று நாடகமாடிய வனத்துறையினர் இருவரையும் ஆனச்சால் பகுதிக்கு வரவழைத்து ஆக.23ல் கைது செய்தனர். டிஞ்சு குட்டன் வீட்டில் இருந்து தந்தத்தின் மூன்று துண்டுகளை கைப்பற்றினர்.
அவை வளர்ப்பு யானைகளுடையது எனவும் 18 ஆண்டுகள் பழக்கம் வாய்ந்த தந்தங்களை மூணாறைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் கொடுத்ததாகவும் தெரியவந்தது. அவர் தலைமறைவானதால் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

