/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வி.ஏ.ஓ., விற்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
வி.ஏ.ஓ., விற்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : மே 05, 2024 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம் : தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தில் வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வருபவர் ராம்குமார் 38. இவரும், கிராம நிர்வாக உதவியாளர் சுமதியும் டி.சிந்தலைச்சேரி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நேற்று முன் தினம் பணி செய்து கொண்டு இருந்தனர்.
டி.சிந்தலைச்சேரி கிழக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் 42. என்பவர் மது போதையில் வந்து வி.ஏ.ஓ.,வையும், உதவியாளரையும் தகாத வார்த்தையால் பேசி உள்ளார். வி.ஏ.ஓ., வின் இடது கையில் குத்தி காயம் ஏற்படுத்தினார்.
பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை செய்வதாக மிரட்டி தப்பி ஓடி விட்டார். பால்ராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.