ADDED : பிப் 25, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே டிப்பர் லாரியில் அனுமதியின்றி எம் சாண்ட் கொண்டு சென்றவரை சண்முக சுந்தரபுரம் வி.ஏ.ஓ., சிந்துதேவி போலீசில் ஒப்படைத்தார். மதுரை தேனி மெயின் ரோட்டில் திருமலாபுரம் விலக்கு அருகே சென்ற லாரியை மறித்து பணியில் இருந்த வி.ஏ.ஓ., சோதனை மேற்கொண்டார். முறையான ஆவணங்கள் இன்றி லாரியில் மூன்று யூனிட் அளவில் எம். சாண்ட் கொண்டு செல்லப்பட்டது.
லாரியை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த திருமலாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் 38, என்பவரை க.விலக்கு போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.