/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீட்டிற்குள் புகுந்து செயினை பறிக்க முயன்றவர் போலீசில் ஒப்படைப்பு இருவர் தப்பி ஓட்டம்
/
வீட்டிற்குள் புகுந்து செயினை பறிக்க முயன்றவர் போலீசில் ஒப்படைப்பு இருவர் தப்பி ஓட்டம்
வீட்டிற்குள் புகுந்து செயினை பறிக்க முயன்றவர் போலீசில் ஒப்படைப்பு இருவர் தப்பி ஓட்டம்
வீட்டிற்குள் புகுந்து செயினை பறிக்க முயன்றவர் போலீசில் ஒப்படைப்பு இருவர் தப்பி ஓட்டம்
ADDED : ஏப் 10, 2024 06:18 AM
கம்பம் : ராயப்பன்பட்டி அருகே ஆனைமலையன்பட்டியில் தனியாக வீட்டிற்குள் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறிக்க முயன்றவரை பொதுக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆனைமலையன்பட்டி வெள்ளைக்கரடு பகுதியில் வசிப்பவர் ஈஸ்வரன் 37, இவரது மனைவி பார்கவி 27. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரன் எலும்பு முறிவிற்கு நாட்டு வைத்தியம் செய்வார். தினமும் காலை 6 மணிக்கு கம்பத்தில் உள்ள தனது வைத்தியசாலைக்கு சென்று விடுவார். இதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் நேற்று காலை ஈஸ்வரன் வீட்டை விட்டு வெளியேறியதும், மூவரும் வீட்டின் பின்பக்க சுவர் ஏறி உள்ளே குதித்துள்ளனர்.
சமையலறையில் இருந்த பார்கவியின் கழுத்தில் கத்தியை வைத்து, தங்க செயினை கழற்றி தருமாறு கேட்டுள்ளனர். அது தாலி செயின் என கூறி தரமாட்டேன் என்றார் பார்கவி, உங்களுக்கு பணம் தானே வேண்டும். நான் தருகிறேன் என்று கூறி, பூஜை அறையில் பாக்ஸ் ஒன்றில் வைத்திருந்த பணத்தை கொடுத்துள்ளார். மூவரும் பணத்தை அங்கேயே பிரித்துள்ளனர்
இந்த சமயத்தில் வெள்ளரிக்காய் விற்பவர் கதவை தட்டியதும், கொள்ளையர்கள் மூவரும் வெளியே குதித்து ஒடியுள்ளனர். பார்கவி கதவை திறந்து வெளியில் வந்து சத்தம் போட்டுள்ளார்.
அந்த வழியே வந்த கோகிலாபுரத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தீபாவளி ராஜ், ஒடியவர்களை விரட்டி ஒருவரை பிடித்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராயப்பன்பட்டி போலீசார் விசாரணையில் பிடிபட்டவர் நீலமேகம் 27 என்றும் திருவண்ணாமலையை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்துள்ளது. தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

