/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை நீர் திறப்பால் சுத்தம் அடைந்த பிக்கப் அணை நீர்த்தேக்கம்
/
வைகை அணை நீர் திறப்பால் சுத்தம் அடைந்த பிக்கப் அணை நீர்த்தேக்கம்
வைகை அணை நீர் திறப்பால் சுத்தம் அடைந்த பிக்கப் அணை நீர்த்தேக்கம்
வைகை அணை நீர் திறப்பால் சுத்தம் அடைந்த பிக்கப் அணை நீர்த்தேக்கம்
ADDED : மே 13, 2024 07:01 AM

ஆண்டிபட்டி : வைகை அணையில் அதிக நீர் திறந்து விடப்பட்டதால் பிக்கப் அணையில் தேங்கி இருந்த கழிவுகள், ஆகாயத்தாமரை செடிகள் நீருடன் அடித்துச் செல்லப்பட்டு, சுத்தமானது.
கடந்த சில மாதங்களாக வைகை அணையில் நீர் திறப்பு இல்லை. வைகை அணையில் திறக்கப்படும் நீர் 2 கி.மீ., தூரம் உள்ள பிக்கப் அணையில் தேங்குகிறது. பின் அங்கிருந்து தேவைக்கேற்ப கால்வாய் வழியாகவும் ஆற்றின் வழியாகவும் பிரித்து அனுப்பப்படுகிறது. பிக்கப் அணை நீரில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்து அனுப்பப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வைகை அணையில் கூடுதலான நீர் திறப்பு இல்லை. இதனால் பிக்கப் அணையில் வளர்ந்த ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் தேங்கி இருந்தது.
இவற்றுடன் ஆற்றில் சேரும் குப்பையும் பிக்கப் அணையில் தேங்கி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்தி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு பின் நேற்று வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் கூடுதலான நீர் திறக்கப்பட்டதால் பிக்கப் அணையில் தேங்கி இருந்த ஆகாயத்தாமரை செடிகள், கழிவுகள் கசடுகள் ஆற்றில் நீருடன் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் தற்போது பிக்கப் அணையில் தெளிந்த நீர் தேங்கி சுத்தமாக உள்ளது.