/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்திற்கு இடையூறாக வாகன நிறுத்தத்தால் சிரமம் போடியில் கண்டு கொள்ளாத போலீசார்

ADDED : மே 19, 2024 06:33 AM

போடி : போடி டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டின் இருபுறமும் கார், டூவீலர்களை நிறுத்தி வருவதால் மக்கள் நடந்து செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள ரோடு கோயில்கள், வங்கி, நூலகம், தினசரி மார்க்கெட் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் இந்த ரோட்டின் இருபுறத்தையும் டூவீலர்கள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்த கார், மாட்டு வண்டிகள் ஆட்டோக்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கோயில், வங்கி, தினசரி மார்க்கெட்டிற்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இது போல் காமராஜ் பஜார் மெயின் ரோட்டின் போக்குவதற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற போலீசாரிடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மெயின் ரோட்டில் போலீசார் வலம் வந்தாலும் இதனை கண்டு கொள்வதில்லை. ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை முறைப்படுத்த எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.