/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டாசு வெடிப்பதால் அதிகரிக்கும் மாசு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அலட்சியம்

ADDED : மே 09, 2024 05:59 AM
கூடலுார்: கூடலுாரில் மாசு ஏற்படும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதால் பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டுகொள்ளாததால் பட்டாசு வெடிப்பது தொடர்கிறது.
தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் பல்வேறு கெடுபிடிகளை விதிக்கிறது. ஆனால் மற்ற நாட்களில் இதை கண்டு கொள்வதே இல்லை. கூடலுாரில் கடந்த சில நாட்களாக திருமணம், காதணி விழா, கோயில் விழா, இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் என அனைத்திலும் பட்டாசுகள் வெடிப்பது அதிகமாகியுள்ளது. இதிலிருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசுபட்டு மக்களை பாதிப்படையச் செய்கிறது. மேலும் திடீரென வெடிக்கும் சத்தத்தால் முதியவர்கள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் கூடலுார் நகராட்சியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. மேலும் அனைத்து திருமண மண்டபங்களிலும் பட்டாசு வெடிக்க கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இவை தற்போது காற்றில் பறக்க விட்டு பட்டாசு வெடிப்பது தொடர்கிறது. இதனை கண்காணிக்கும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்யாமல் அலட்சியத்துடன் இருப்பது தொடர்கிறது.